யாழில் அதிகரிக்கும் மலேரியா

யாழ்ப்பாணம், பெப் 17: யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக மலேரியா பாதிப்பு இனம் காணப்படுவதாகவும். இதுதொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சின் மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர கூறுகையில் ” யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 4 வாரங்களில், நான்கு மலேரியா நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் மலேரியா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. மக்கள் இதுதொடர்பாக விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்’ என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *