
யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 13 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 7 பேர் வெளிநாடு செல்வதற்காக தயாரானவர்கள் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொண்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளில் 13 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில், வைத்தியசாலையின் ஊடாக பரிசோதனைக்கு உட்பட்டவர்களில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 7 பேர் கடவுச்சீட்டு பெற்றுவதற்கான பரிசோதனை மேற்கொண்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கொரோனாத் தொற்று காரணமாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.