ரஜரட்ட பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர் ஒருவர் நீச்சல் தடாகத்தில் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தமது நண்பர்களுடன் நேற்று மாலை நீச்சல் தடாகத்தில் இறங்கியபோது குறித்த மாணவர் நீரில் மூழ்கியதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனையடுத்து, சக மாணவர்கள் அவரை மீட்டு முதலுதவிகளை வழங்கி பல்கலைக்கழக நோயாளர் காவு வண்டி மூலம் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், அவர் முன்னதாகவே உயிரிழந்ததாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய மாணவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில், காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.