
கொழும்பு, பெப் 17: அகில இலங்கை நிபுணத்துவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் 9வது தேசிய மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கொழும்பு நெலும் பொகுண மஹிந்த ராஜபக்ச திரையரங்கில் நடந்தது.
அகில இலங்கை நிபுணத்துவ விரிவுரையாளர்கள் சங்கம் என்பது 2004 ஆம் ஆண்டு இலங்கை முழுவதிலும் உள்ள கல்வி ஆசிரியர்கள் குழுவால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும்.
இது பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் உட்பட பலதரப்பட்ட துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 3,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
இதன் 9வது தேசிய மாநாடு புதன்கிழமை நடந்தது.
இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ‘கிரீன் டீச்சர்’ இணையத்தளத்தை தொடக்கி வைத்தார்.
சங்கத்தின் தலைவர் கலாநிதி அமித் புஸ்ஸல்லா, நிர்வாக சபை உறுப்பினர்கள், கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன, ராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, சிசிர ஜயக்கொடி, சீத்தா அறம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான குணபால ரத்னசேகர, வசந்த யாப்பா பண்டார மற்றும் பலர் கலந்துகொண்டனர்.