2023 ஆண்களுக்கான ஆசியக் கிண்ண தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் 15 பேர் கொண்ட அணிக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தசுன் ஷனக தலைமையிலான அணையில் பதும் நிஸ்ஸாங்க, திமுத் கருணாரத்ன, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, மகேஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, மதீஷ பத்திரன, கசுன் ராஜித, துஷான் ஹேமந்த, பினுர பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் காயம் காரணமாக பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பினுர பெர்னாண்டோ மற்றும் பிரமோத் மதுஷன் ஆகியோர் காயமடைந்த வீரர்களுக்குப் பதிலாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் குசல் பெரேரா காய்ச்சலில் இருந்து மீண்டு வருகிறார் என்றும் அவர் முழுமையாக குணமடைந்தவுடன் அணியில் இணைவார் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.