பேருந்தை மறித்து சாரதி, நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள்! samugammedia

வெல்லவாய தனமல்வில பிரதான வீதியின் எதிலிவெவ பிரதேசத்தில் மொனராகலையில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எதிலிவெவ பிரதேசத்தில் பேருந்தை நிறுத்தி, தடிகளுடன் சிலர் பேருந்திற்குள் நுழைந்து பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியதுடன், பயணிகள் குழுவொன்றும் தாக்கப்பட்டுள்ளது.

பேருந்து பயணத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி குடாஓய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மொனராகலை – மாத்தறை தனியார் பேருந்துகள் நேற்று (28) சேவையில் இருந்து விலகியிருந்தன.

மாத்தறை – மொனராகலை பேருந்துகள் இன்று (29) காலை முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் குடா ஓய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான சம்பவம் ஒன்று காரணமாக, கடந்த சனிக்கிழமை மாவனல்லை-கொழும்பு தனியார் பேருந்து ஒன்று கொழும்பு – கண்டி வழித்தடத்தில் மொலகொட பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி இருந்தது.

பாணந்துறை – கொழும்பு பேருந்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீதியை மறித்த குண்டர்கள் குழுவொன்று மாவனெல்லலை – கொழும்பு பேருந்து மீது தடியடி நடத்தியதில் இந்த விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply