யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பகுதியில் அனுமதி பத்திரம் இன்றி மணலேற்றி சென்ற டிப்பர் ரக வாகனமொன்றுடன் சாரதி ஒருவரை மானிப்பாய் பொலிசார் இன்று காலை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது..
சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிப்பர் ரக வாகனமொன்றை வழிமறித்து சோதனையிட்ட பொழுது அனுமதி பத்திரமின்றி பயணித்தமை தெரியவந்தது.
இதனையடுத்து 33 வயதான வாகன சாரதியினையும் குறித்த வாகனத்தையும் கைப்பற்றி மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.