எங்கே எங்கள் உறவுகள்? மட்டக்களப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில்  வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல்  ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலராஸ் அமலநாயகியினால் முன்னெடுக்கப்பட்ட   இவ்ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மதகுருமார்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர்  பங்கேற்றிருந்தனர்.

இதன்போது போது ”எமது உறவுகள் எமக்கு வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, சர்வதேச விசாரணைவேண்டும்,  நஷ்டஈடு எமக்கு வேண்டாம், சாட்சியங்களை அழிக்காதே, ஆட்கடத்தலை நிறுத்து, உள்ளக விசாரணை வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு  கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பியிருந்தனர்.

Leave a Reply