பெண்ணின் ஆடைக்குள் சிக்கல்…! விமான நிலையத்தில் ஏற்பட்ட கதி…!samugammedia

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கற்களை வௌிநாட்டுக்கு கடத்த முற்பட்ட பெண் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த வர்த்தகப் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 30 வயதுடைய  குறித்த பெண் ஒருகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இன்று காலை கட்டுநாயக்கவில் இருந்து சென்னை நோக்கி பயணிக்க முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது ஆடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மாணிக்கக்கற்களின் எடை 2311.75 கிராம் என தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட  மாணிக்கக்கற்களின் சந்தை பெறுமதி 29.1 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிலைய சுங்க அதிகாரிகளின் மேலதிக விசாரணைகளின் பின்னர், குறித்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply