இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 66 ஆவது பேராளர் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 66 ஆவது பேராளர் மாநாடு நாளைய தினம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாகவும் இதில் வட கிழக்கு தெற்கு என நாடு முழுவதும் உள்ள சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது அதிபர், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் மற்றும் பொதுமக்களின் பிரச்சனைகள. குறித்தும் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை ஆட்சியாளர்கள் அரச சொத்துக்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பதாகவும் இங்கு வாழ முடியாது என கூறி பலரும் வெளிநாடு செல்வதாகவும் தெரிவித்தார்.