மீன் உணவை உட்கொண்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜப்பான் பிரதமர்!

அணுக்கழிவு நீரில் வளர்ந்த மீன்களை உட்கொண்டு ஜப்பான் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஜப்பானின்  ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து வெளியேறிய நீரில் வளர்ந்த மீன்கள் ஆபத்தானவை இல்லை என்பதை நாட்டு மக்களுக்கு  உணர்த்தவே அவர் இவ்வாறு செய்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து கதிர்வீச்சு கலந்த அணுக்கழிவு நீர் பசிபிக் பெருங்கடலில் திறந்துவிடப்பட்டது. தொன் கணக்கில் அணுக்கழிவு நீர் கடலில் வெளியேற்றப்பட்டதற்கு சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

 

இந்நிலையில், அணுக்கழிவு நீர் வெளியேறிய கடல் பகுதியில் இருந்து பிடிக்கப்பட்ட மீன், ஒக்டோபஸ் உள்ளிட்டவற்றை வைத்து தயாரிக்கப்பட்ட உணவை ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) மற்றும்  அமைச்சர்கள் சிலர் மதிய உணவு கூட்டத்தின்போது உட்கொண்டனர்.

அத்துடன் அணுக்கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே கடலில் திறந்துவிடப்பட்டதாகவும், அதனால் அப்பகுதியில் வாழும் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதையும் உணர்த்தவே இந்த உணவை அவர்கள் உட்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அண்டை நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அடுத்த சில ஆண்டுகளுக்கு ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து அணுக்கழிவு நீர் தொடர்ந்து திறந்துவிடப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply