ஆதிவாசிகளின் தலைவர்- அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு…!samugammedia

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபென்ஸ் நேற்றையதினம்  தம்பானே ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலேத்தோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்நிலையில் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலேத்தான் உட்பட ஆதிவாசி சமூகத்தை சந்தித்து, அவர்களின் வரலாறு, தற்போதைய சவால்கள் குறித்து கவனம் செலுத்த கிடைத்தமை கௌரவம் என உயர்ஸ்தானிகர் நேற்று தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நிரந்தர வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொள்வது, கலாசாரம் மற்றும் நாட்டுடன் சம்பந்தப்பட்டு அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை அவுஸ்திரேலியாவின் ஆதிகுடிகளின் அனுபவத்துடன் ஒற்றுமைகளை காண்கின்றேன் எனவும் உயர்ஸ்தானிகர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply