யூடியூப் பயனர்களுக்கு அதிர்ச்சி…! நீக்கப்படவுள்ள வீடியோக்கள்…! வெளியான காரணம்…!samugammedia

இன்றைய நவீன உலகில் தகவல் தொழினுட்பத்தின் வளர்ச்சியானது நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகின்றது.

குறிப்பாக தற்போதைய நிலையில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் அசுர வேகத்தில் பயணித்துக்கொண்டிருப்பதாக சர்வதேச தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அந்தவகையில், தற்போதைய நிலையில் சிறுவர் முதல் பெரியோர்கள் வரை  அனைவரையும் கவர்ந்த  ஒன்றாக விளங்குவது யூடியூப் ஆகும்.

இந்நிலையில் யூடியூப் நிறுவனம் விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதாவது யூடியூப்பில் சமூக விதிமுறைகளை மீறியதற்காக  இந்தியர்களின் 19 லட்சம் வீடியோக்கள் உட்பட உலகம் முழுவதும் 64 கோடிக்கும் அதிகமான வீடியோக்களை நீக்கி உள்ளதாக யூடியூப் நிர்வாகம்  அறிவித்துள்ளது.

இது குறித்து யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

எங்களின் சமூக வழிகாட்டுதலை மீறுதல் மற்றும் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன என்றும் அதன்படி இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மட்டுமே 19 லட்சம் இந்தியர்களின் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்காவில் 6 லட்சத்து 54,968 வீடியோக்களும், ரஷ்யாவில் இருந்து 4,91,933 வீடியோக்களும் பிரேசில் நாட்டிலிருந்து 4,49,759 வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளதாக யூடியூப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் யூடியூப் பயனர்கள் இது தொடர்பில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply