இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளதாக சினோபெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் மற்றும் லங்கன் இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், நாட்டில் புதிதாக செயற்பாட்டை ஆரம்பித்துள்ள சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையை இன்று (01) முதல் உயர்த்தியுள்ளது.
இதன்படி,ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 358.00 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையும் 414.00 ஆக அதிகரித்துள்ளது.
லங்கா ஒயிட் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 338.00 ரூபாவாகவும், லங்கா சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 356.00 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.