விகாரைக்கு மேலேயே திருக்கேதீஸ்வர ஆலயம் நிர்மாணிப்பு..! வெடித்தது சர்ச்சை…!samugammedia

கோகர்ண விகாரையை அழித்து அதன் மேலேயே திருக்கேதிஸ்வரம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அதலால், ‘திருக்கேதீஸ்வரத்தை 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான’ ஆலயம் என்று தனது ருவிற்ரர் பதிவில் குறிப்பிட்ட அமெரிக்க தூதுவர் உடனடியாக மன்னிப்புக் கூறவேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்க தூதுவர் உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ச்சியாகத் தலையிடுகிறார். உள்ளக விடயங்களில்  தலையிடுவதை ஜூலி சங் நிறுத்த வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் திருக்கேதீஸ்வரர் ஆலயம் அவர் குறிப்பிட்டது போல 2 ஆயிரத்து 500 ஆண்டு கால வரலாறு கொண்டது என அவர் குறிப்பிட்டதனை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும். முடியாவிட்டால் அவர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *