திருமலை மணல் அகழ்வு பிரச்சினை…!நேரில் விஜயம் செய்த கஜேந்திரன் எம்.பி…!samugammedia

திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட மணல் அகழ்வு பிரச்சினையை பார்வையிட  பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இன்று (02)  விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.

வெருகல்- பிரதேசத்திலுள்ள நாதனோடை  பகுதியில் மணல் அகழ்வதினால் அணைக்கட்டு உடைப்பெடுக்கும். இதனால் ஒன்பது கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த  13 ஆயிரம் பேர் பாதிக்கப்படலாம் என தெரிவித்து அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த நாதனோடை பகுதியில் மணல் அகழ்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் குறித்த பிரதேசத்தில் மண் அகழ்வதினால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என தெரிவித்து ஒன்பது கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
இதே நேரம் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிரதான நபர்களை இலக்கு வைத்து பொலிஸார் கைது செய்து வருவதுடன் இதுவரைக்கும் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
மணல் அகழ்வதற்கு செல்ல விடாமல் தடுத்ததாக  கூறி ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கைது செய்து வருவதாகவும், எமது உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் பொதுமக்களாகிய நாங்கள் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்வதற்கு சென்றால் திருப்பி அனுப்புவதாகவும் அப்பகுதியிலுள்ள மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனிடம் முறையிட்டனர்.
இவ்விடயம் தொடர்பாக நேரடியாக பார்வையிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் குறித்த பகுதிக்கு வருகை தந்ததுடன் ஈச்சிலம்பற்று பொலிஸ் பொறுப்பாதியிடம்    பொது அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கும் போது  ஓரிரு சிலரை மாத்திரம் கைது செய்யாமல் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து  பொலிஸார் கேட்டறிந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply