கோட்டா கோ கம போராட்டத்தால் ஆளுங்கட்சி எம்.பிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்…!samugammedia

இலங்கையில் கடந்த வருடம் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையினை தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி கோட்டா கோ கம என எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி இறுதியில் அவரை பதவி விலகச் செய்த நிகழ்வு கடந்த வருடம் அரசியல் அரங்கில் பேசுபொருளாக தொடர்ந்தது.

இந்நிலையில்,  கோட்டா கோ கம போராட்டத்தின் பின்னர் தங்கள் மீதான அச்சுறுத்தல் தொடர்வதாக தெரிவித்து ஆளுங் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் குடும்ப உறுப்பினர்கள் சகிதம் மேற்குலக நாடுகளுக்கான விசாவை பெற்றுக்கொண்டுள்ளதாக நம்பகரமாக அறியமுடிகிறது.

இப்படி விசா பெற்றுக்கொண்ட ஆளுங் கட்சி அரசியல்வாதிகளின் உறவினர்கள் பலர் ஏற்கனவே வெளிநாடுகளுக்குச் சென்று புகலிடம் கோரியுள்ளனர்.

குறிப்பாக, கோட்டா கோ கம போராட்டத்தின் பின்னர் வீடுகள் தீ வைப்பு, சொத்துகள் மீதான தாக்குதல் என்பவற்றால் பாதிக்கப்பட்டதாகக் கூறும் அரசியல் பிரமுகர்கள் பலர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக  அறியமுடிகிறது.

Leave a Reply