
பிரதமர் மஹிந்த ராஜபக்கசவின் செயலாளர் டி.எம். அநுர திஸாநாயக்க கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர் தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமரின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை நிர்வாக சேவையில் சிரேஷ்ட அதிகாரியான அநுர திஸாநாயக்க, இதற்கு முன்னர் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக கடமையாற்றியுள்ளதோடு, பல்வேறு அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளையும் வகித்துள்ளார்.