157 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு யாழ்ப்பாண ஆலயங்களில் பூஜை வழிபாடுகள்! samugammedia

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

யாழ்ப்பாணம் சென் ஜேம்ஸ் ஆலயத்திலும், மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்திலும், யாழ்ப்பாண நகர் ஜும்மா பள்ளிவாசலிலும் குறித்த பிரார்த்தனைகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பிரார்த்தனைகளில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுள செனரத் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply