தம்பதெனிய பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மஹாஓயா பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கேற்ப மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த பகுதியிலுள்ள காணி ஒன்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.
உயிரிழந்தவர் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என்பதுடன், மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.