முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இன்று சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Au lanka நிறுவனத்தினர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து இவ் விழிப்புணர்வு பேரணியினை முன்னெடுத்திருந்தனர்.
இதில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் , முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ, Au Lanka நிறுவனத்தின் செயற்திட்ட உத்தியோகத்தர் பி.நந்தகுமார், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.