நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பிரதேச செயலகப் பிரிவுக்கு மூன்றாம் நிலை சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, களுத்துறை, கேகாலை மற்றும் காலி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட நிலை 1 மற்றும் நிலை 2 மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
எனவே, இப் பகுதியில் வசிக்கும் மக்கள்,மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுதல் குறித்து விழிப்புடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.