யாழ் வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் போராட்டம்!

யாழில் மருத்துவத் தவறினால்  8 வயதுச்  சிறுமியொருவரின்  இடது கை அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி  யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக  பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது  ”குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட தாதியைப்  பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும்  போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தோர் தெரிவித்தனர்.

இதேவேளை  இச்சம்பவம் தொடர்பில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மகஜரொன்றை கையளிப்பதற்கு பொதுமக்களிடமிருந்து  கையெழுத்து சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply