பொலிஸ் வாகனத்துக்குள் இளம் பெண்ணுடன் உல்லாசம்: அதிகாரி இடை நிறுத்தம்

பணி நேரத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் இளம் பெண் ஒருவருடன் பொலிஸ் வாகனத்துக்குள் உல்லாசமாக இருந்த வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் எனவும் அவர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி இதற்கு முன்னர் தனது முன்னாள் காதலியின் மகளைத்  தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் ஒரு மாதம் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply