கடந்த மூன்று ஆண்டுகளிலேயே சுகாதாரத்துறைக்கு ஒரு சவால் நிறைந்த காலமாக அமைந்தது கடந்த மூன்று வருடங்களை விசேடமாக எடுத்துக்கொண்டால் எமது நாட்டிலே பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்ற சந்தர்ப்பங்களிலே சுகாதாரத்துறை தான் மிகவும் சவால் நிறைந்த பிரச்சனைக்கு தள்ளப்பட்டுள்ளது
பவித்திரா வன்னியராட்சி இருந்து கடும் நடவடிக்கைகள் மேற்கொண்ட கால கட்டத்தில் அதனைப்போன்று கெஹலிய ரம்புக்வெல்ல கடமையாற்றிய காலப்பகுதியிலும் மற்றைய அமைச்சர்கள் கடமையாற்றியிருந்த காலப்பகுதியிலும் இவ்வாறான வசதிகள் கிடைத்திருக்கவில்லை அவர்கள் பல்வேறு விதமான சவால்களுக்கு முகம் கொடுத்து இருந்தார்கள்
உலகில் எங்கும் காணப்படாத கசப்பான அனுபவங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டி இருந்தது. இந்த நிலையில் சுகாதாரத்துறையில் ஒரு சவால் நிறைந்த நிலைமையாக மாறியது. நிதி ஒதுக்கீடு என்பன இல்லாமல் போனது இந்த நிலையில் அமைச்சர்கள் என்ற அடிப்படையில் கொள்கை ரீதியிலான தீர்மானங்களை எடுப்பதற்கு பல்வேறு துறைகளிலே நிபுணத்துவம் மிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கின்றார்கள்
கெஹலிய ரம்புக்வெல்ல கொவிட் தொற்றுக்கு பின்னராக மாத்திரமல்ல இவர் பாரம் எடுக்கும் குறைந்த பட்சம் தேவையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முடியாத சந்தர்ப்பம் வங்கிகளிலே நிதி ஒதுக்கீகளை பெற முடியாத சந்தர்ப்பம் காணப்பட்டது. இதனை அமைச்சரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு விளைவு என்று கூறிக்கொண்டு இருக்கின்றார்கள் .
மருந்து தட்டுப்பாடு தொடர்பில் ஒரு அமைச்சர் என்ற முறையிலே கெஹலிய ரம்புக்வெல்ல கலந்துரையாடியுள்ளார். கடந்த காலத்தில் இந்தியா எமது நாட்டிற்கு கடனுதவி வழங்கிய போது சில நிபந்தனைகளை செய்திருந்தார்கள் எங்கு மருந்து கொள்வனவு செய்ய வேண்டும் எங்கு மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என்று கடன் வழங்கும் நிறுவனம் எமக்கு நிபந்தனைகளை விதித்து இருந்தது
700 டொலரை கடனாக வழங்கும் சந்தர்ப்பத்தில் இந்தியாவின் வழங்குனர் திட்டம் தான் அந்த பெற்றோலியம் வழங்குவதற்கு திறக்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் நாங்கள் எடுக்கும் தீர்மானங்கள் சந்தர்ப்பத்திற்கு அப்பால் சென்றுள்ளது
பவித்திரா வன்னியராச்சி அமைச்சராக பாரம் எடுக்கின்ற சந்தர்ப்பத்திலே அந்த காலப்பகுதியிலே இருந்த எங்களுடைய அரசாங்கம் 32 மில்லியன் டொலருக்கு அப்பால் மருந்து கூட்டுத்தாபனங்களுக்கு வழங்கப்படாத பில் நிலுவையாக காணப்பட்டு இருந்தது. இதனால் அந்த கொம்பனிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்க வேண்டிய சூழல் இருந்தது. இதனால் அந்த கொம்பனிகள் எமக்கு உதவிகளை வழங்காமையால் சவால்களை எதிர் நோக்கினோம் எங்களுடைய நாடு சுகாதாரதுறை போன்று பல்வேறு தொழில் சங்கங்களை கொண்டுள்ள நாடு எங்கும் இருக்காது என்று நான் நம்புகின்றேன்
சில சந்தர்ப்பங்களில் அமைச்சருக்கு எதிராக பல நம்பிக்கையில்லா தீர்மானங்கள் வருவது அவர்களை பதவியில் இருந்து விரட்டியடிப்பதற்கு அந்த பழைய முறைமையை மாற்றி புதிய அமைப்பிற்கு செல்வதாக இருந்தால் அது இலகுவான விடையம் அல்ல புதிதாக கொள்வனவு என்ற விடையங்களை வினவும் போது ஒரு குழுவினர் அதற்கு எதிராக செயற்படுகின்றார்கள்
நாங்கள் வைத்திய நிறுவனங்களை நிறுவும் போது எதிர்க்கட்சிகள் பெரும்பாலானோர் கூறுகின்ற விடயம் பட்டதாரி கடையை ஆரம்பிக்கின்றார்கள் என்று அந்த பட்டதாரி கடைகளை ஆரம்பிக்கின்றார்கள் என்று கூறுகின்றவர்களே தங்களுடைய நிறுவனங்களை முன்னெடுத்து செல்லுவதற்கு அவர்களே வைத்தியசாலைக்கு சென்று மருந்துகளை பெறுவதற்கு வலியுறுத்தகின்றார்கள் இது தான் எமக்கு இருக்கும் பிரச்சனை என தெரிவித்துள்ளார்
படுகடன் உவப்பாக்க வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இன்னும் சொற்ப நேரத்தில் இது தொடர்பிலான வாக்கெடுப்பும் இருக்கின்றது எங்களுடைய வெளிநாட்டு கடன்களை மறுசீர் அமைப்பதற்கு உள்நாட்டு கடன் உவப்பாக வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
யார் பதவி வகித்தாலும் கூட தரம் குறைந்த மருந்துகளை பெறுவதற்கு நாங்கள் உடன்படுவது இல்லை. சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள் அவர் தான் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை செய்பவர் போல் கதைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்
மேலும், நாங்கள் எவ்வாறு சுகாதாரத்துறையை செய்ய வேண்டும் என்றும் அதனை விடுத்து அரசியலில் விரலை சுட்டிக்காட்டி இவர் தான் இப்படி செய்தார் என குற்றச்சர்டுக்களை குறிப்பிட்டு எதுவும் கூற முடியும் என்றும் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சி கூறிய விடயத்தோடு இந்த சுகாதார சேவையின் எதிர்கால வளர்ச்சிக்கு சிஸ்டம் சேஞ்சினை பயன்படுத்துவீர்கள் என எதிர்பார்க்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் சுகாதார அமைச்சருக்கு எதிராக அரசாங்கத்தில் உள்ள அனைவராலும் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோல்வியடைய செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்