தொலைக்காட்சி பெட்டி மாயம்…!சந்தேக நபர் கைது..! samugammedia

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்டொக்ஹோம் தோட்ட ஸ்ஹாபுரோ பிரிவில் உள்ள தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் நேற்று மாலை தனது இல்லத்தை பூட்டி விட்டு திருமண வைபவம் ஒன்றுக்கு போய் திரும்பி வந்து பார்த்த போது வீடு உடைக்கப்பட்டு 32 அங்குல எல்,ஈ, டி தொலைக்காட்சி பெட்டியை காணவில்லை என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று மஸ்கெலியா பொலிசார் பார்வை இட்ட பின்னர் விசாரணை மேற்கொண்ட போது அதே தோட்டத்தை சேர்ந்த  42வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது தொலைக்காட்சி பெட்டியும் மீட்கப்பட்டு சந்தேக நபரை ஹட்டன் பதில் நீதவான் தமயந்தி முன்னிலையில் ஆஜர்படுத்தபட்ட போது சந்தேக நபரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

    

Leave a Reply