ஜே.சி.பி இயந்திரம் இராணுவத்தினரின் உதவியுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்தலியாறு பகுதியில் நேற்றைய தினம் 08.09.2023 ஜே.சி.பி இயந்திரம் மூலம் அனுமதி இன்றி வயல் பகுதியில் மண் அகழ்வு இடம் பெறுவதாக இராணுவத்தினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்மைய சம்பவயிடத்துக்கு விரைந்த இராணுவத்தினர், ஜே.சி.பி இயந்திரத்தை பறிமுதல் செய்துள்ளதுடன் அதன் சாரதியையும் கைது செய்து தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபர் இன்றைய தினம் 09.09.2023 கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.