வெளிநாட்டு நோயாளர்களை நாட்டுக்கு ஈர்க்க உயர்ந்த சுகாதாரத்துறை அவசியம் – ஜனாதிபதி! !samugammedia

வெளிநாட்டினரை சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து வருவதற்கு மருத்துவ சுற்றுலா மற்றும் உயர்தர சுகாதார சேவையை பேணுவது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்காக சுகாதாரக் கொள்கை மீள் கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (08) பிற்பகல் ஜோசப் பிரேசர் வைத்தியசாலையின் 100வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட போது குறிப்பிட்டார்.

அதிகளவான வைத்தியர்களை உருவாக்க இந்நாட்டில் அதிகளவான மருத்துவ பீடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, இந்த நாட்டில் உள்ள சுகாதார பணியாளர்கள் பலமான எதிர்காலத்திற்காக மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply