நல்லூர் ஆலய மஹோற்சவத்தின் தங்கரத திருவிழா! samugammedia

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 21ஆவது நாள் தங்கரத திருவிழா இன்றையதினம் சிறப்பாக நடைபெற்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை(10) மாலை முருகப்பெருமான் வள்ளி தெய்வாணை சகிதம் தங்க ரதத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் வழங்கினர்.

இதன்போது பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.எதிர்வரும் 12ம் திகதி மாலை சப்பரத் திருவிழாவும் 13ம் திகதி காலை தேர்த்திருவிழாவும் 14ம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.

Leave a Reply