சஜித் வீட்டில் மைத்திரிக்கு கதவடைப்பு…! வெளியான காரணம்…!samugammedia

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமது கூட்டணியில் இணைத்துக்கொள்ளாதிருக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அடுத்துவரும் தேர்தல்களில் மைத்திரியையோ அல்லது அவர் தலைமை வழங்கும் கட்சியையோ கூட்டணியில் இணைத்துக்கொள்ளக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், கட்சித் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை மைத்திரியின் அரசியல் நிலைப்பாடுகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட காரணிகளைக் கருத்திற்கொண்டே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த கோரிக்கையைப் பரிசீலித்த கட்சித் தலைமை அதை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply