56வது ஜெனிவா கூட்டத்தொடரிலாவது தமக்குரிய தீர்வினை பெற்றுத் தர வேண்டும்…! கனகரஞ்சிதம் கோரிக்கை…!samugammedia

இன்று ஆரம்பமான 56வது  ஜெனிவா கூட்டத்தொடரிலாவது தமக்கான உரிய தீர்வினை ஜெனிவா பெற்றுத் தர வேண்டும் என  கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 12 ,13 ஆண்டுகளாக வீதி ஓரங்களிலும் மர நிழல்களிலும் தமது உறவுகளுக்காக நீதி கோரி போராடிவரும் நிலையில் கடந்த 36 ஆவது ஜெனிவாவின் கூட்டத்தொடரில் இருந்து மனித உரிமையை பேணுகின்ற நாடுகளில் எடுத்துக் கூறி வரும் நிலையில் இதுவரையில் எந்தவித நீதியும் கிடைக்கப்பெறவில்லை எனவும் தற்பொழுது 56வது  ஜெனிவா கூட்டத்தொடர் இன்று  நடைபெற்றுவரும் நிலையில் இந்தக் கூட்டத்தொடரிலாவது தமக்கான உரிய தீர்வினை ஜெனிவா பெற்றுத் தர வேண்டும்.

தற்பொழுது நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு   சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்து வரும் நிலையில் கொடூர யுத்தத்தின் மூலம் கொல்லப்பட்ட எமது உறவுகளுக்கும் நீதியைப் பெற்றுத் தர வேண்டும்  தமது உறவுகளை தொலைத்து சர்வதேச நாடுகள் ஒன்று கூடி நடைபெறுகின்ற சர்வதேச ஜெனிவா கூட்டத் தொடரில் எமக்கான தீர்வினையும் பெற்றுத் தரவேண்டும் எனவும் இதன் ஊடாக இலங்கை அரசாங்கத்தின் முகமூடியை கிழித்து சர்வதேச இலங்கைக்கு உரிய மனித உரிமை மீறப்பட்டவர்களுக்கு
தண்டனை வழங்கவேண்டும்.

தற்பொழுது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி  அலையும் அனைவர்களும் வயது முதிர்ந்து தற்பொழுது முடியாத நிலையில் வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் நோய் தாக்கத்தில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உரிய தீர்வினை பெற்று தர வேண்டுமென அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *