5வது நாளாக தொடரும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி …! அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட சி.சிறீதரன் எம்.பி…!samugammedia

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்  ஐந்தாவது நாளாக இன்று (11) இடம்பெறும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  மற்றும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வருகைதந்து அகழ்வுப் பணிகளை பார்வையிட்டனர்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் ஐந்தாம்நாள் அகழ்வாய்வுகள் இன்று (11) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply