யாழ். மல்லாகம் நீதிமன்றத்தில் மாயமான கஞ்சா..! samugammedia

யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்று பொருளான 50 கிலோ கஞ்சா மாயமாகி உள்ளது என தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு சான்று பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரியினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பகுதியில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் 50 கிலோ கஞ்சா களவாடப்பட்டுள்ளது அல்லது மாயமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சான்று பொருளே இவ்வாறு காணாமல் போய் உள்ளது.

இது தொடர்பான விரிவான விசாரணைகளை தெல்லிப்பளை பொலிசார் மாற்றும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply