தமிழர் பகுதியில் பௌத்த விகாரை…! பிக்குவின் உயிருக்கு ஆபத்து…! பொலிஸில் முறைப்பாடு…!samugammedia

திருகோணமலை- பொரலுகந்த ரஜமஹா விகாரை அமைப்பதற்கு முன்னின்று செயற்பட்ட பௌத்த பிக்குவிற்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக  மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மொரவெவ- தெவனிபியவர இந்ரா ராம  விகாரையின் விஹாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி நேற்றையதினம்(11)  இம் முறைப்பாட்டினை  செய்துள்ளார்.
அம் முறைப்பாட்டில் சொகுசு  வெள்ளை வேனில் நான்கு பேர்  தனக்கு சொந்தமான இரண்டு விகாரைகளுக்கும் தேடி வந்ததாகவும், குறித்த வேனில் வருகை தந்தவர்கள் யார் என்று தெரியாது எனவும் தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருகோணமலை இலுப்பை குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பொரலுகந்த ரஜமஹா விகாரையின் நிர்மாண பணிகளை இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக  ஆர்ப்பாட்டங்களை முன்னின்று செய்ததாகவும், அதனால் தனக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக மொரவெவ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், விகாரைக்கு வருகை தந்த வெள்ளை வேன் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்று வருவதாகவும்  மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *