1000 தாதியர்களை உடனடியாக சேவையில் இணைக்க நடவடிக்கை – சுகாதார அமைச்சர் அறிவிப்பு

தாதியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 1000 தாதியர்களை உடனடியாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதார அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தற்போது சுமார் 3,000 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாக தெரிவித்தார்.

துணைச் சேவையில் உள்ள தாதிகள் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளர் எஸ்.ஜே.எஸ் சந்திரகுப்த மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Leave a Reply