இலங்கையின் புளிப்பு வாழைப்பழத்திற்கு வெளிநாடுகளில் வந்த கிராக்கி..! மூன்றாவது பதப்படுத்தும் தொழிற்சாலையை அமைக்க தீர்மானம் samugammedia

இலங்கையின் புளிப்பு வாழைப்பழங்களுக்கு வெளிநாடுகளில் கேள்வி எழுந்துள்ள நிலையில் வாழைப்பழ ஏற்றுமதிக்கான மூன்றாவது பதப்படுத்தும் தொழிற்சாலையை ஹம்பாந்தோட்டையில் அமைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. 

அரிசி சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலையை பயன்படுத்தி மூன்றாவது புளிப்பு வாழைப்பழ ஏற்றுமதி மற்றும் பதப்படுத்தும் தொழிற்சாலையை ஹம்பாந்தோட்டை முறவசிஹேனேயில் நிர்மாணிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

மூன்றாவது புளிப்பு வாழை ஏற்றுமதி வலயமானது எம்பிலிப்பிட்டிய, ஹம்பாந்தோட்டை மற்றும் செவனகல ஆகிய பகுதிகளில் 800 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கி அமைக்கப்படவுள்ளது.

முதலாவது புளிப்பு வாழை ஏற்றுமதி வலயம் மற்றும் பதப்படுத்தும் நிலையம் இராஜாங்கனையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாவது புளிப்பு வாழை ஏற்றுமதி மற்றும் பதப்படுத்தும் நிலையம் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் விவசாயத்துறை நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் பிரகாரம் இராஜாங்கனையில் 800 ஏக்கரிலும் யாழ்ப்பாணத்தில் 400 ஏக்கரிலும் புளிப்பு வாழை செய்கையை விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *