கிளிநொச்சியில் குடிநீர் வழங்கல் நிகழ்வு!

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு  சுத்தமான குடிநீரைப்  பெற்றுக் கொடுப்பதற்கான பணிகள் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இக்  குடிநீர் வழங்கல்  திட்டத்தின் முதல் கட்டமாக  கரைச்சி மற்றும் கண்டாவளை பகுதிகளில்,  5 குடிநீர் தொகுதிகள் மக்கள் பாவனைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்றைய தினம் (13 ) திறந்து வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், திணைக்கள அதிகாரிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply