உடுப்பிட்டி சந்தியில் பிரபல பாடசாலைகளுக்கு மிக அண்மையில் மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்றையதினம்(14) காலை அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுபான சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்இ குறித்த அனுமதியை இரத்து செய்யுமாறு வலியுறுத்தியும் அப்பகுதி மக்களால் உடுப்பிட்டி சந்தியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.