கல்முனையில் பொலிஸாரின் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு…!samugammedia

கல்முனை தலைமைய  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதார சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட பொலிஸாரின் குடும்பங்களுக்கு  பொலிஸாரினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு   கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் நடைபெற்றதுடன்  கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக  அதிதியாக கலந்து கொண்டு குறிப்பிட்ட குடும்பங்களுக்கு இவ் உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்தார்.

இதன் போது கடந்த கால யுத்தத்தின் போது உயிரிழந்த பொலிஸாரின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்ட பொலிஸாரின் உறவினர்கள் அங்கவீனமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களின் நலன்கள் குறித்து ஆராயப்பட்டன.

இதன்போது   கல்முனை தலைமையக பொலிஸ் பெரும் குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான  அலியார் றபீக் ,கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகரும் சுற்றுச் சூழல் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஐயூப்,கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பொறுப்பதிகாரியும்  உப பொலிஸ் பரிசோதகருமான குமாரி பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச்செயலாளரும் காணி மத்தியஸ்த சபை பிரதான மத்தியஸ்தருமான எம்.ஐ.எம் ஜிப்ரி (எல்.எல்.பி) மற்றும் ஆலோசனை குழுவின் உறுப்பினர்கள்   பயனாளிகள்  பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *