யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆலயத்தின் நந்தவனப் பகுதியில் பணியாற்றுமொருவர் காளை மாடு முட்டி உயிரிழந்துள்ளார்.
இருபாலையைச் சேர்ந்த நித்தியசிங்கம் என்ற 60 வயது மதிக்கத்தக்க ஒருவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று (14) மாலை குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காளை மாட்டுக்கு உணவு வைக்க சென்ற வேளை காளை மாடு முட்டி காயமுற்றவர் வீழ்ந்து கிடந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
The post நல்லூரில் ஒருவர் பலி appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.