மன்னாரில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு!

மன்னாரில் இவ்வாண்டு  மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களையும் உயர் தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்று வலயக்கல்வி அலுவலகத்தில்  நடைபெற்றது.

மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர்  தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில்  பிரதம விருந்தினர்களாக வைத்திய கலாநிதி எம்.கதிர்காமநாதன், சமூக சேவையாளர் யதீஸ், சர்வமதத்  தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வெற்றிபெற்ற மாணவர்கள் கௌரவிக்கப் பட்டதோடு,அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும்  வழங்கி வைக்கப்பட்டன.

Leave a Reply