வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய திருவிழாவில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பிருத்தி அஸ்விகா எனும் இரண்டு வயது சிறுமியே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீர்த்த திருவிழாவான நேற்றையதினமே குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாகவும் சிறுமியை மீட்டுத் தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவை சொந்த இடமாக கொண்ட இந்த சிறுமி ஆலயத்தில் காணாமல் போயுள்ளதால் அவரை எங்காவது கண்டவர்கள் உடனடியாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.