சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற் சங்கத் தலைவர்களில் பலர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா உள்ளிட்டோர் தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியில் இணைய ஆரம்பித்துள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவில் சுமார் 100 தொழிற் சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன.
இவற்றில் சுமார் 25 தொழிற்சங்கங்களின் தலைவர்கள் புதிய அரசியல் கூட்டணியின் தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் நிமல் லன்சா ஆகியோரைச் சந்தித்து அந்தக் கூட்டணியில் இணைந்துள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அசங்க அண்மையில் புதிய அரசியல் கூட்டணியில் இணைந்து கொண்ட நிலையில் ஏனைய தொழிற் சங்கங்களும் குறித்த கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.