தியாக தீபம் திலீபனின் வரலாற்றை கேட்டு கதறிய முதியவர்…!நல்லூரில் மக்கள் மனதை உருக்கிய சம்பவம்…!samugammedia

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் வாழ்க்கை வரலாற்றை செவிமடுத்த முதியவர் ஒருவர்,கண்ணீர் சிந்தி தனது உணர்வினை வெளிப்படுத்திய சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

இது தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது,

தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவு வாரம் நேற்றையதினம் ஆரம்பமாகிய நிலையில், நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் நேற்றையதினம் இரவு  நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவாலயத்தில் திலீபனின் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் விடுதலை உணர்வு ஏற்பட காரணமாக அமைந்த நிகழ்வு அத்துடன் திலீபனின் உண்ணா நோன்பின் நோக்கம் என்பவற்றுடன் உண்ணா நோன்பு இருந்த நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் ஒலிபரப்புச் செய்யப்பட்டன.

இந்நிலையில், குறித்த ஒலிபரப்பு இடம்பெற்ற வேளை  அவ்விடத்துக்கு வருகைதந்த முதியவர் ஒருவர் தமிழ் மக்களின் விடுதலைக்கான திலீபனின்  உயர் அர்ப்பணிப்பை கேட்டு கண்ணீர் சிந்தி தனது உணர்வினை வெளிப்படுத்திய விதம் பார்ப்பவர்கள் மத்தியில் கண்ணீரை வரவழைத்தது.

அதேவேளை நல்லூர் கந்தன் வருடாந்த திருவிழா இடம்பெற்றுவரும் நிலையில்இ குறித்த நினைவாலயம் அமைந்துள்ள பகுதியில் மேற்படி வரலாறு ஒலிபரப்பு செய்யப்பட்டிருந்த சமயம்இ அங்கு பெருந்திரளான மக்கள் கூடியிருந்து, ஆர்வத்துடன் செவிசாய்த்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

இது தொடர்பிலான வீடியோவினை பார்வையிட கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *