மட்டக்களப்பு சித்தான்டி பிரதேச கால்நடை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் இன்று 2வது நாளாகவும் தொடர்கின்றது.
சட்ட விரோத குடியேற்றம் தடுக்கப்பட்டு மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
சித்தாண்டி பால் பண்ணை முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
சுழற்சி முறையிலான போராட்டத்தின் தொடர்பாக இன்று நடைபெற்ற அடையாள உண்ணாவிரத்தில் உள்ளுர் மக்கள் பண்ணையாளர்கள்அரசியல் வாதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் கோவிந்தன் கருணாகரம்,செல்வராஜா கஜேந்திரன்,ஆகியோர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ப.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,ஆகியோரும் முன்னாள் கிழக்கு மாணசபை உறுப்பினர்களான இரா துரைரெட்ணம்,மற்றும் பிரசன்னா இந்திரகுமார் கலந்து கொண்டு ஆதரவை தெரிவித்தனர்.