யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 2 குழந்தைகள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து பூநகரி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி, 2 குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் தாயாரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பொதுமக்களின் உதவியுடன் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரும் கிளிநொச்சி – பூநகரி – 4ம் கட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக காற்று கட்டுப்பாட்டை இழக்க செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த வீதியில் பயணிப்பவர்கள் மிகுந்த அவதானமாக பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.