இந்த நாட்டின் மாற்றத்துக்கான வழியை செய்யக்கூடிய ஒரே சக்தி தேசிய மக்கள் சக்தியே – மௌலவி முனீர் முலஃபர் தெரிவிப்பு…!samugammedia

தேசிய மக்கள் சக்தி மற்றவர்கள் போல  இலாபங்களையோ பதவிகளையோ சிந்தித்து அல்லாமல் . இந்த நாடு மாற்றமடைய வேண்டும் என்ற கொள்கைக்காக செயல்படும் என்று மௌலவி முனீர் முலஃபர் தெரிவிதுள்ளார்.

 மூதூர் தொகுதி தேசிய மக்கள் சக்தியின்  உச்சி மாநாடு ஒன்று நெறைய தினம் (16) இடம்பெற்றது 

இதில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அங்கு மேலும் உரையாற்றிய அவர், 

நான் நேற்றையதினம் (15) கிண்ணியா பிரதேசத்தை பற்றி சிங்கள மொழியிலே இருந்த ஒரு செய்தியை வாசிக்க கிடைத்தது. நெற் களஞ்சிய சாலையில் ஒரு வெளிநோயாளர் பிரிவு (தமிழில்) நிறுவப்பட்ட ஒரு இடமாக கிண்ணியா இருக்கிறது.  கிண்ணியாவை பொறுத்தவரையில் சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரைக்கும் கிண்ணியாவை பிரதிநிதித்துவப்படுத்தி சில சந்தர்ப்பங்களில் ஓருவர் இன்னும் சில சந்தர்ப்பங்களில் இருவர் இன்னும் சில சந்தர்ப்பங்களில் மூவராக நீங்கள் பாராளுமன்றம் அனுப்பி வைத்திருந்தீர்கள். 

சிலபோது பாராளுமன்றத்திலே அவர்களது சேவை போதாது என்பதற்காக சில சந்தர்பங்களையே மாகாண முதலமைச்சர்களாகவும் கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்தவர்களை நீங்கள் அனுப்பினீர்கள். ஆனால் சிங்கள பத்திரிகைகளிலுள்ள அந்த செய்திதான் ஒரு லட்ச்சத்துக்கும் அதிகமானவர்கள் வாழுகின்ற பிரதேசம்,  40000 வாக்காளர்களை கொண்ட ஒரு பிரதேசம்,  ஒரு மாதத்துக்கு 200க்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கின்ற வைத்தியசாலை. 

எனவே இந்த மிகப்பெரிய பிரதேசத்துக்கும்  மகப்பேற்று வைத்தியசாலை ஒன்றுதான் இருக்கிறது. இந்த வைத்தியசாலையில் பணிபுரிகின்ற ஒரு VOG மாத்திரம் தான்  இருக்கின்றார். அவரும் எந்த சந்தர்ப்பத்திலும்  எப்போதும் இந்த பிரதேசத்தை, இந்த வைத்தியசாலையை விட்டு வெளியேறுவார் என்பது தெரியாத ஒரு நிலை. அதே போன்று சிறுவர் சம்பந்தமான விசேட வைத்திய ஒருவரும் கூட இந்த வைத்தியசாலையை விட்டும் நகர்ந்து விட்டார். வேறு ஒரு இடத்துக்கு சென்றுவிட்டார். இது வைத்தியசாலை என்று சொல்வதற்காக வைத்தியசாலை அல்ல. 

உங்களுக்கு தெரியும் 20 வருடங்களுக்கு முன்னால் சுனாமி பேரலை ஏற்பட்ட போது குறித்த வைத்தியசாலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் இத்தாலிய அரசாங்கத்தின் ஊடாக தற்காலிகமாக நிறுவப்பட்ட வைத்தியசாலைதான் அந்த வைத்தியசாலை.

ஆனால்  அது சில வைத்தியர்கள் இந்த சிங்கள சிங்கள பத்திரிகையின் நேர்காணலில் சில விடயங்களை சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக தகரத்தால் தான் அதன் மதில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில் வெளிநோயாளர் பிரிவினருக்கு  வைத்தியம் செய்யமுடியும் 10 மணி  வரையும் தான். 

அதற்கு மேலால் இருக்கின்ற உஷ்ணத்தை பொறுத்து தொடர்ந்தும் அந்த இடத்தில்  வேலை செய்ய முடியாது.  எனவே தான் சுதந்திரம் தொடக்கம் நீங்கள் பாராளுமன்றம் அனுப்பியவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள் அவர்கள் யாரும் இந்த வைத்தியசாலைக்கு வருவது கிடையாது. அவர்கள் வெளிநாடுகளில் இருக்கின்ற வைத்திய சாலைக்கு செல்வார்கள். 

தரமான வைத்தியர்களை நோக்கி செல்வார்கள், அங்குதான் அவர்களுக்குரிய மருந்துகளை பெற்று கொள்வார்கள். ஆனால் நாமோ இங்கு உயிரோடு போராடி மருந்து பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். 

ஒரு முஸ்லிம் என்ற அடிப்படையில் வாக்குகளை வழங்குகின்ற போது வாக்கு என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். அது அமானுயம். ஒருவரை நல்லவர் என்று சாட்சி பகிர்ந்து எமது பிரச்சினைக்காக பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவார் என்று அவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்திருக்கின்றோம். கிண்ணியா மக்களின் நிலையை, மூதூர் தொகுதி மக்களின் நிலையை பாருங்கள் மிக கடுமையாக இந்த பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் நீண்ட பிரச்சினைகளுக்கு உட்படுத்தியிருக்கின்றார்கள்.  

இங்கு வந்தபோது அறிமுகமான இரண்டு தாய்மார்களை சந்தித்த போது சொன்னார்கள் பிள்ளைகளை படிப்பதற்காக வகுப்புகளுக்கு அனுப்பமுடியாத  ஒரு நிலை எனவே க.பொ.த சாதாரண தரத்தில் படிக்கின்ற எனது பிள்ளையை இப்பத்து நிப்பாட்டி விட்டேன். 

நாம் என்ன காரணத்துக்காக ஒருவருக்கு வாக்களிக்கின்றோம். உங்களுக்கு தெரியும் 2020 ஆம் ஆண்டு பொது தேர்தல் வந்த போது இந்த நாட்டிலே இருந்த சூழ்நிலை உங்கள் அனைவருக்கும்  தெரியும். இந்த நாட்டிலே இனவாதம் தலைவிரித்தாடி இனவாதம் இந்த நாட்டில் தீவிர சக்தியாக மாறியிருந்த சந்தர்ப்பத்தில் உங்களுக்கு தெரியும் தெற்கிலே பயங்கரமாக இனவாதம் பேசப்படுகின்ற போது இனவாதத்தினை  தனது மூலதனமாக பயன்படுத்தி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளுகின்ற போது அந்த இனவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும், அதற்கு எதிராக நாம் வாக்களிக்க வேண்டும் என இந்த பிரதேசத்தில் நீங்கள் பிரதிநிதிகளாக அனுப்பியவர்கள் இங்கு வந்து கதைத்தார்கள். எனவே நீங்கள் என்ன செய்தீர்கள்?

அந்த இனவாதத்தை தோற்கடிக்க இங்கு பேசப்பட்ட அந்த பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தீர்கள். இந்த நாட்டிலே உங்களுக்கு தெரியும் கொரோனா பிரச்சினை வந்த போது  பச்சிளம் பாலகர்கள் தீயிலிட்டு எரிக்கின்ற  போது பல்லாயிரம் பேர் அத்தகைய நிலைமைக்கு உட்படுகின்றபோது அந்த சந்தர்ப்பத்தில் தான் பொது தேர்தல் வந்தது. எனவே விரக்தியோடு, வெறுப்போடு, கோப்பதோடு  அந்த இனவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் இந்த பிரதேசத்திலிருந்து ஒருவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பினோம். 

உங்களுக்கு தெரியும்  இலங்கை வரலாற்றிலே அநியாயமாக அப்பாவிகளை கொலை செய்து இரத்தக்கறையுடன் இந்த ஆட்சி மேடை ஏறியவர்கள். இன்று அது அம்பலமாகி இருக்கின்றன. பகிரங்கமாக பேசப்படுகின்றன. எல்லோரும் அதனை பற்றி பேசுகின்றார்கள். அந்த கறை  படிந்த ஆட்சியாளர் தனக்கு இருக்கின்ற பலம் போதாது. பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பாராளுமன்றத்திலே 20 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்தார். 

பொது தேர்தலில் இனவாதத்தினை  பேசியவர்கள் அந்த இனவாதம் தோற்கடிக்க பட வேண்டும். அதற்கெதிராக நாம் பாராளுமன்றம் செல்கின்றோம் என்று சொல்லியவர்கள்  20 ஆவது வாக்கு எடுக்கின்ற போது கூட  கையிலே “விஸ்ஸ எபா”  20 வேண்டாம் என்று கையில் அடித்தவர்கள் அதே லேபிளை அடித்துக்கொண்டு  “விஸ்ஸ ஓன” ” இருபது ஓன” என்று அடித்துச்சென்றார்கள் 

நாம் இந்த மேடைக்கு ஏறியிருப்பது அவர்களை போன்று இலாபங்களையோ பதவிகளையோ சிந்தித்து அல்ல. இந்த நாடு மாற்றமடைய வேண்டும். மாற்றத்துக்கான அந்த வழியை வேறு யாராலும் செய்ய முடியாது. அதனை செய்யக்கூடிய ஒரே சக்தி தேசிய மக்கள் சக்தி என்பதை மிக தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். என அவர் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *