கொடிகாமம் கச்சாய் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொடிகாமம் – கச்சாய் வீதியில் நேற்று (16) இரவு ஒன்பது மணியளவில் சைக்கிளில் பயணித்தவாறு வீதியை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன் போது அதே பகுதியைச் சேர்ந்த துரைச்சாமி தெய்வேந்திரநாதன் வயது 70 என்னும் வயோதிபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.