இனவாத அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும் – சீமான்

திலீபன் நினைவு ஊர்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் இனவாத அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்நாடு அரசாங்கம் இந்திய ஒன்றிய அரசாங்கத்தினை வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல், ஜனநாயக முறையில் தமிழர்கள் ஒருபோதும் உரிமையைப் பெற்றுவிட முடியாது என்பதையே மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் இனவாத அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply