திருகோணமலை தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டுள்ள சீமான்

தமிழ் மக்களுக்காய் தன்னுயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான காடையர்களுக்கு கடும் கண்டனத்தை சீமான் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான தனது கண்டனத்தை அறிக்கையுடாக தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில்,

பாஜக அமைதியாக வேடிக்கை பார்ப்பது ஏன்?
ஈழத்தாயகத்தில் திருகோணமலை கப்பல் துறையில் தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்திமீதும் அதில் பயணித்த செல்வராஜா கஜேந்திரன் மீதும் 50 இற்கும் மேற்ப்பட்டவர்களால் தாக்குதல் நடத்தியமை கண்டத்திற்குரியது.

தமிழ் மக்களின் சனநாயக பிரதிகளின் மீதான வன்முறை தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெறும் நிலையில் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அமைதியாக வேடிக்கை பார்ப்பது ஏன்? இது தான் இந்தியா தமிழர்களுக்கான உரிமையை பெற்றுக்கொள்ளும் முறையா? எனவும் அறிக்கையில் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post திருகோணமலை தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டுள்ள சீமான் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply